நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசிய நாணயத்தின் மதிப்பு உயர்வு

கோலாலம்பூர்: 

அமெரிக்க டாலர் மற்றும் மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது.

இன்று காலை 9 மணிக்கு, கடந்த வெள்ளியன்று 4.7440/7480 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மீண்டும் 4.7230/7280 ஆக உயர்ந்தது.

ஓபிஆர் 3.0 விழுக்காடாக இருக்கும் நிலைத்திருக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாகவும் பொருளாதார நிலை குறித்த நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) சமீபத்திய மதிப்பீடுதான் மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுவதாகவும் மூவாமாலாட் தேசிய வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் டாக்டர் முஹம்மத் அஃப்ஜனிசாம் அப்துல் ரஷிட் தெரிவித்துள்ளார். 

தற்போது சந்தை பங்கேற்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கூறினார்.

எனவே, உள்ளூர் நாணயத்தின் மதிப்பு இன்று 4.73-4.74 ஆக இருக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உள்நாட்டில், முக்கிய நாணயங்களின் குழுவிற்கு எதிராக ரிங்கிட் அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது.

உள்ளூர் நாணயம் கடந்த வெள்ளியன்று 5.9926/9977 இலிருந்து பவுண்டிற்கு எதிராக 5.9812/9875 ஆக உயர்ந்தது.

அதே நேரத்தில், ரிங்கிட் மற்ற ஆசியான் நாணயங்களை விட அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை 3.1928/2120 இலிருந்து தாய்லாந்து பாட்க்கு எதிராக 13.2042/2241 ஆக குறைந்துள்ளது.

இருப்பினும் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக ரிங்கிட் கடந்த வாரம் 3.5229/5264 இலிருந்து 3.5154/5194 ஆக உயர்ந்தது.

இந்தோனேசிய ரூபியாவிற்கு எதிராக ரிங்கிட் 302.1/302.7/ இலிருந்து 302.7/ க்கு எதிராக வலுவடைந்தது. 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset