
செய்திகள் விளையாட்டு
ரொனால்டோவுக்கு தடை, அபராதம் விதிப்பு; என்னை யாரும் நிறுத்த முடியாது: ரொனால்டோ
ரியாத்:
அல் நசர் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு சவூதி லீக் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ரொனால்டோவின் அல்நசர் அணியும் அல் ஷாபாப் அணியும் மோதின.
ஆட்டம் முடிந்த பிறகு ரொனால்டோ ரசிகர்களைப் பார்த்து தகாத முறையில் கை அசைத்துள்ளார்.
அது தொடர்பான காணொலி சமூக ஊடகத்தில் பரவியது. பின்னர் அது பெரும் சர்ச்சையாக மாறியது.
ரொனால்டோவின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில் அவருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டதாக சவூதி அரேபிய கால்பந்து சங்கம் தெரிவித்தது.
மேலும், ரொனால்டோ கால்பந்து சங்கத்திற்கு 10,000 சவூதி ரியால், அல் ஷாபாப் அணிக்கு 20,000 சவூதி ரியால் அபராதமாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரொனால்டோ இந்த முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய அனுமதி இல்லை.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது என ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 25, 2025, 9:01 am
மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை
April 25, 2025, 8:53 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:43 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
April 23, 2025, 5:10 pm
46 ஆவது ஆண்டாக பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் போட்டி
April 23, 2025, 8:37 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 23, 2025, 8:34 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 22, 2025, 9:55 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் சமநிலை
April 22, 2025, 9:52 am