நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மகா கவிதை புத்தகத்திற்காக கவிஞர் வைரமுத்துவிற்கு பெருந்தமிழ் விருது மலேசியாவில் வழங்கப்படுகிறது: டத்தோஸ்ரீ சரவணன்

சென்னை:

மகா கவிதை புத்தகத்திற்காக கவிஞர் வைரமுத்துவிற்கு பெருந்தமிழ் விருது 
மலேசியாவில் வழங்கப்படுகிறது.

இதனை மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் சென்னையில் அறிவித்தார்.

மலேசியா தமிழ் சங்கத்தைச் சேர்ந்த 12 பேர் அடங்கிய குழு கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை என்ற புத்தகத்தை ஆய்வு செய்துப் பாராட்டியுள்ளனர். 

அதன் அடிப்படையில் மகா கவிதை புத்தகத்திற்காக கவிஞர் வைரமுத்துவிற்கு பெருந்தமிழ் விருது வழங்கப்பட உள்ளது. 

மலேசியாவின் தமிழ் இலக்கியக் காப்பகமும், தமிழ் பேராயமும் இணைந்து இந்த விருதை வழங்குகின்றன.

இதற்கான அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவுக்கு பொன்னாடை அணிவித்த மலேசிய முன்னாள் அமைச்சர், அழைப்பிதழ் வழங்கினார். 

இவ்விழா வரும் மார்ச் 8ஆம் தேதி அன்று மாலை 06.00 மணிக்கு மலேசியா நாட்டின் கோலாலம்பூர் அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உட்பட பல அறிஞர்கள், தலைவர்கள் முன்னிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இவ்விழா மிகவும் மாபெரும் அளவில் நடைபெறும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, 

விருது சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். 90 வயது வரை யாரும் காத்திருக்க வயது இல்லை, பொறுமையும் இல்லை, விருது வழங்கும் நிறுவனத்திற்கு நான் வைக்கும் கோரிக்கை இல்லை, எனது ஆதங்கம். 

தமிழகத்தில் உள்ள பல நூல்களில், மகா கவிதை நூல் விருது பெற்றது தமிழ்யிட்ட கட்டளை என்று நான் கருதுகிறேன்

இந்திய புத்தகத்திற்கு மலேசியா விருது வழங்க உள்ளது.

ஆனால் இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் விருது, தமிழ் மொழிக்கு எத்தனை முறை ஞான பீடம் விருது வழங்கியுள்ளது? இந்தியாவின் உயரிய விருதான ஞான பீடம் இதுவரை 58 விருதுகள் வழங்கியுள்ளது.

இந்தி மொழிக்கு 11 முறையும், கன்னட மொழிக்கு 8 முறையும், மலையாளம், வங்காளம் மொழிக்கு 6, உருது மொழிக்கு 5 முறை. 

ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு 2 முறை மட்டுமே அகிலன், ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேருக்கு மட்டுமே விருது கொடுத்துள்ளது ஞான பீடம் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset