நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கராபாவ் கிண்ணம்: லிவர்பூல் சாம்பியன்

லண்டன்:

கரபாவ் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

வெம்பளி அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் செல்சி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 118ஆவது நிமிடத்தில் வெர்ஜில் வான் டிஜ்க் அடித்தார்.

இதன் மூலம் லிவர்பூல் அணியினர் கரபாவ் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.

நிர்வாகி ஜர்கன் குளோப் தலைமையில் லிவர்பூல் அணியினர் வெல்லும் இரண்டாவது கரபாவ் கிண்ணம் இதுவாகும்.

ஏற்கனவே கடந்த 2021-22 சீசனுக்கான கிண்ணத்தை லிவர்பூல் அணியினர் வென்றுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset