நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மீபா கால்பந்துப் போட்டியில் பட்டர்வொர்த் ரேஞ்சர்ஸ், குளுவாங் அணிகள் வெற்றி

மலாக்கா:

மீபா கால்பந்துப் போட்டியில்  பட்டர்வொர்த் ரேஞ்சர்ஸ், குளுவாங் இந்தியர் கால்பந்து அணிகள் வெற்றி பெற்றன.

14 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான மீபா கால்பந்துப் போட்டி மலாக்காவில் நடைபெற்றது.

23 ஆண்கள் அணியும் 9 பெண்கள் அணியும் இந்த கால்பந்துப் போட்டியில் களமிறங்கின.

இதில் ஆண்கள் பிரிவில் பட்டர்வொர்த் ரேஞ்சர்ஸ் அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அவ்வணியினருக்கு 1,500 ரிங்கிட்டும் வெற்றி கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டது.

இப்பிரிவில் பிளேக் ஹண்தர்ஸ், டிஐஏ எப்சி, கேஆர் 7 ஆகிய  அணிகள் வெற்றி பெற்றன.

May be an image of 9 people and text

பெண்கள் பிரிவில் குளுவாங் இந்தியர் கால்பந்து அணியினர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர்.

இப் பிரிவில் எஸ்பிடி இந்தியர் அணி, கடாரம் மூடா, ஏஎம்ஏ ஆகிய அணிகள் அடுத்த் நிலையில் வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் விபி சண்முகம் பரிசுகளை எடுத்து வழங்கி சிறப்பித்தார்.

May be an image of 15 people and text

இந்திய இளைஞர்கள் கால்பந்து உட்பட அனைத்து விளையாட்டிலும் சாதிக்க வேண்டும். அதற்கான உதவிகளை வழங்க மலாக்கா மாநில அரசும் நானும் தயாராக உள்ளோம்.

அதே வேளையில் மீபா முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இது தான் பிள்ளைகளின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்று சண்முகம் கூறினார்.

பரிசளிப்பு விழாவில் மீபா தலைவர் அன்பானந்தன், துணைத் டத்தோ பதி, ராஜன், போட்டி ஏற்பட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீ, ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset