நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலாக்காவில் மீபாவின் கால்பந்துப் போட்டி; 32 அணிகள் பங்கேற்பு: அன்பானந்தன்

மலாக்கா:

மீபாவின் 14 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டி மலாக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் 32 அணிகள் கலந்து கொண்டு தங்களின் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர் என்று அதன் தலைவர் அன்பானந்தன் கூறினார்.

கால்பந்து விளையாட்டில் இளம் இந்திய விளையாட்டாளர்களை உருவாக்கும் நோக்கில் மீபா தொடர்ச்சியாக போட்டிகளை நடத்தி வருகிறது.

12 வயதுக்கு கீழ்ப்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு கால்பந்துப் போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.

அப்போட்டிகளில் சிறந்து விளங்கும் விளையாட்டாளர்கள் மீபாவின் கால்பந்து பயிற்சி பட்டறையில் பங்கேற்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக மீபாவின் 14 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கால்பந்துப் போட்டியை மலாக்கா மாநிலம் ஏற்று நடத்துகிறது.

இப்போட்டியில் 23 ஆண்கள் அணியினர் களமிறங்கி உள்ளனர். முதல் முறையாக 9 பெண்கள் அணியின்ர் இந்த போட்டியில் களமிறங்கி உள்ளனர்.

பரிசுகளை வெல்வதற்காக அனைத்து அணிகளும் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் தொடர வேண்டும்.

குறிப்பாக இம்மாணவர்கள் தொடர்ச்சியாக இவ்விளையாட்டில் சாதிக்க வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை மீபா மேற்கொள்ளும் என்று போட்டியை தொடக்கி வைத்த அன்பானந்தன் கூறினார்.

இந்த தொடக்க விழாவில் மீபாவின் துணைத் தலைவர் ராஜன், ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ஸ்ரீ, மலாக்கா மீபா செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் கால்பந்து வீரர்களான சந்தோக் சிங், ஜெயராஜூ, டத்தோ சோன் சின் ஆன், முன்னாள் ஓட்டப்பந்தய வீர ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset