நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பா லீக் கிண்ணம்: ஏசிமிலான் முன்னேற்றம்

ரோம்:

ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் சுற்று 16க்கு ஏசிமிலான் உட்பட பல அணிகள் முன்னேறி உள்ளன.

ரோசன் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ஏசிமிலான் அணியினர் ஸ்டேட் ரென்னர்ஸ்  அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஏசிமிலான் அணியினர் 2-3 என்ற கோல் கணக்கில் ரென்னர்ஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.

இருந்தாலும் 5-3 என்ற மொத்த கோல் கணக்கில் ஏசி மிலான் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா அணியினர் 4-2 என்ற மொத்த கோல் கணக்கில் பியார்னோட் ரோட்ட்டர்டாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் ஸ்போர்டிங் சிபி, மார்செலே, பென்பிகா, பிராய்பர்க் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset