நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ்; அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி

துபாய்: 

துபாய் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் துயாயில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலகத் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் உள்ள பெலாருஸின் அரினா சபலெங்கா, 31-ஆம் நிலைவீராங்கனையான குரோஷியாவின் டோனா வெகிக்கைச் சந்தித்து விளையாடினார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டோனா வெகிக் 6-7 (5-7), 6-3, 6-0 என்ற செட் கணக்கில் அரினா சபலெங்காவை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் விம்பிள்டன் சாம்பியனான செக்குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவா 6-1, 5-7, 6-2 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் பெய்டன் ஸ்டெர்ன்ஸை வீழ்த்தினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset