நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான்  ஆண்ட்ரியாஸ் பெரேம் காலமானார்

முனிச்:

கால்பந்து உலகின் முன்னணி வீரர்களின் ஒருவரான ஜெர்மனியை சேர்ந்த ஆண்ட்ரியாஸ் பெரேம் என்ற வீரர் தன்னுடைய 63ஆவது வயதில் காலமானார். 

1990ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி அர்ஜெண்டினாவுடன் பல பரிட்சை நடத்தியது.

இந்த போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கிண்ணத்தை தட்டிச் சென்றது. 

இந்த கோலை ஆண்ட்ரியாஸ் பிரம்மி என்ற வீரர் தான் அடித்தார். இதனால் அவர் ஜெர்மனியின் ஹீரோவாக கொண்டாடப்பட்டார்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய 63ஆவது வயதில் காலமானார்.

பாயர்ன் முனிச் அணியின் முன்னாள் வீரராகவும் ஆன்ட்ரியாஸ் செயல்பட்டார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாயர்ன் முனிச், ஆண்ட்ரியாஸ் மரணம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.  அவர் ஜெர்மனியின் சாம்பியன் ஆவார்.

இந்த சோகமான தருணத்தில் அவருடைய ரசிகர்களுடன் இணைந்து நாங்கள் எங்களுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset