நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கோயில்களுக்கு காணிக்கையாக வரும் தங்கத்தை தமிழக அரசு என்ன செய்கிறது?

சென்னை: 

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திருவிடைமருதூர் கோவி.செழியன் (திமுக, அரசு தலைமை கொறடா): பக்தர்கள் தரும் காணிக்கை நகைகளை உருக்கி சேமிப்பு வைப்பு திட்டத்தில் வைத்து அரசு திட்டத்தை செயல்படுத்துகிறதா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, கடந்த 10 ஆண்டுகளில் அந்த பணிகள் நிறுத்தப்பட்டதால் பல்வேறு திருக்கோயில்களில் பொன் இனங்கள் தேங்கி இருந்தது. 

மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டதும் இதுவரை 5 திருக்கோயில்களின் பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்களை ஒன்றிய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கி பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.191.65 கோடி மதிப்பீட்டிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிடைக்கப்பெறும் வட்டித்தொகை ஆண்டிற்கு ரூ.4 கோடியே 31 லட்சம். மேலும் 10 திருக்கோயில்களின் சுமார் 156 கிலோ எடையுள்ள பயன்பாடற்ற பலமாற்று பொன் இனங்கள் ஒன்றிய அரசின் தங்க உருக்காலைக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் உள்ளது. 

முதல்வர், திருக்கோயில்களின் வருவாயை பெருக்குவதற்காக இத் திட்டத்தை மூன்று ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் செயல்படுத்துவதற்கு ஆணையிட்டதன் காரணமாக இன்று திருக்கோயில்களுக்கு ஆண்டிற்கு சுமார் ரூ.6 கோடி வருமானம் கிடைப்பதோடு, இந்த திட்டம் முழுமை பெறுகின்றபோது ரூ.25 கோடி ஆண்டிற்கு வட்டி தொகை மூலம் வருமானமாக கிடைக்கும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset