நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் உரிமையியல் நீதிபதி ஸ்ரீபதி: ஜவாஹிருல்லா பாராட்டு

சென்னை:

பழங்குடியின சமூகத்தின் முதல் பெண் உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியுள்ள ஸ்ரீபதிக்கு
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி கிராமமான புலியூர் பகுதியில் பிறந்தவர் ஸ்ரீபதி. 

ஏலகிரி மலையில் தமிழ் வழியில் கல்வி கற்று, அதன் பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு இருந்தார். இடையில் அவருக்குத் திருமணமான போதும், படிப்பைக் கைவிடாமல் தொடர்ந்து பட்டப்படிப்பைப் படித்து முடித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஸ்ரீபதி, ஆறுமாத காலப் பயிற்சிக்குப் பின் நீதிபதி ஆகிறார். குழந்தை பிறந்து இரண்டே நாட்களில் தேர்வு எழுதி இந்த சாதனையைப் படைத்திருக்கிறார் என்பது வியப்புக்குரிய தகவல்.

ஜவ்வாது மலையிலிருந்து பழங்குடி பெண் ஒருவர், முதல்முறையாக நீதிபதி ஆகி பெண் சமூகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

தமிழ் வழியில் பயின்றோருக்கு  அரசு பணியில் முன்னுரிமை என்ற  திமுக ஆட்சி பிறப்பித்த அரசாணையின் பயனாளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தடைகள் பல கடந்து அவர் அடைந்துள்ள வெற்றி  என்பது திராவிட மாதிரி அரசின் சமூச நீதி கொள்கையின் மற்றொரு  சாதனையாகும் என்று எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset