நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா 

சென்னை:

தமிழ்நாடு மின்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, துறை  இல்லாத அமைச்சராகத் தொடர்ந்து வந்தார். அவரது துறைகள் நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்குக் கூடுதலாக ஒதுக்கப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில்  செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்படும் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், 8 மாதங்களுக்கும் மேலாக துறை இல்லாத அமைச்சராக நீடித்து வந்தார்.

நேற்று, செந்தில் பாலாஜி, அவரது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து, அதற்கான கடிதத்தை தமிழக அரசின் பொதுத் துறையிடம் நேற்று அவர் வழங்கினார். 

பின்னர், இந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்வரின் பரிந்துரையை ஏற்று செந்தில் பாலாஜியின் ராஜிநாமா கடிதம் ஏற்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset