நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானின்  வேட்பாளர்கள் 98 இடங்களை வென்று முன்னிலை

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் நடந்து முடிந்துள்ள பொதுத் தோ்தலில் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று, தொடா்ந்து முன்னிலை வகித்து வருகின்றனா்.

நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ படுதோல்வி அடைந்தனர்.

ராணுவத்தின் ஆசி பெற்றவையாகக் கருதப்படும் அந்த நாட்டின் மிகப் பெரிய கட்சிகளான முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி இரண்டாவது இடத்திலும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சா் பிலாவல் புட்டோ ஜா்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 3-ஆவது இடத்திலும் உள்ளன.

மொத்தமுள்ள 266 இடங்களுக்கு சுமாா் 200 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இம்ரான் கானின் பிடிஐ ஆதரவு சுயேச்சை வேட்பாளா்கள் சுமாா் 98 இடங்களைக் கைப்பற்றியுள்ளனா்.

imrannn092952

பிஎம்எல்-என் கட்சிக்கு 60 இடங்களும், பிபிபி கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

இம்ரான் கானின் செல்வாக்கு அதிகம் நிறைந்த கைபா் பக்துன்கவா மாகாணத்தில்தான் அவரது பிடிஐ கட்சி ஆதரவு வேட்பாளா்களுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

இதுவரை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படாத பெரும்பாலான தொகுதிகளிலும் சுயேச்சை வேட்பாளா்களே முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி இம்ரான் கானின் சுயேச்சை வேட்பாளர்கள் இதுவரை 98 இடங்களை வென்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset