நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புக்கு இடையே தேர்தல்: வாக்குச்சாவடியில் குண்டு வெடித்ததில் 4 பேர் பலி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் இன்று (வியாழக்கிழமை) பலத்த பாதுகாப்புடன்  நடைபெற்றது.

கைபர் பக்துன்கவாவில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 4 போலீஸார் பலியாகினர்.

இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் நடைபெறும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க 12.85 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில்  7,32,07,896 பேரும், அதனைத் தொடர்ந்து சிந்து மாகாணத்தில் 2,69,94,769 பேரும் உள்ளனர்.  

கைபர் பக்துன்கவா மாகாணத்தில் 2,19,28,119 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
சுமார் 6.5 லட்சம் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல், ரகசியக் காப்புறுதி மீறல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இந்தத் தேர்தலில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாஃப் கட்சியின் கிரிக்கெட் மட்டை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டதால் அவரது வேட்பாளர்கள் அனைவரும் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

அவரது கட்சி இந்தத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைப் பெறுவதற்கான வாய்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது.

இதனிடையே, அந்த நாட்டின் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் புதன்கிழமை நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 30 பேர் உயிரிழந்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset