நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்திய ராணுவம் மார்ச் 10க்கு முன்பு வெளியேறும்: மாலத்தீவு அதிபர்

மாலே:

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவப் படையின் குழு வரும் மார்ச் 10ம் தேதிக்குள்ளும் மற்ற வீரர்கள் மே மாதம் 10ம் தேதிக்கு முன்பும் திருப்பி அனுப்பப்படுவர்' என்று அந்நாட்டு அதிபர் முஹம்மத் மூயிஸ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ், சீனாவின் ஆதரவாளராகக் கருதப்படுகிறார்.

இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று பதவியேற்றதும் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு எதிராக அந்நாட்டு இணையமைச்சர்களின் அவதூறு கருத்துகளைத் தொடர்ந்து, இருநாட்டு உறவுகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முதல் முறையாக முகமது மூயிஸ் திங்கள்கிழமை ஆற்றிய உரை:

நமது நாட்டிலிருந்து வெளிநாட்டு ராணுவப் படைகளைத் திருப்பி அனுப்பி, இழந்த கடல் பகுதியை மீட்டெடுப்போம் என்ற எதிர்பார்ப்புடன் மாலத்தீவு மக்கள் இருக்கிறார்கள்.

மாலத்தீவில் இருக்கும் 3 விமானத் தளங்களில் ஒன்றில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வரும் மார்ச் 10ம் தேதிக்கு முன்பு திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவார்கள். மற்ற 2 தளங்களில் உள்ள வீரர்களும் மே 10ம் தேதிக்குள் திரும்ப அழைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset