நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியக் கிண்ணம்: அரையிறுதியில் தென் கொரியா

டோஹா:

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்திற்கு தென் கொரியா அணியினர் முன்னேறி உள்ளனர்.

அல் ஜானோப் அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென் கொரியா அணியினர் ஆஸ்திரேலியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் கொரியா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

தென் கொரியா அணியின் வெற்றி கோல்களை ஹுவாங் ஹீ சான், சோம் இயோங் மின் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து தென் கொரியா அணியினர் ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் ஜோர்டான் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் தஜிகிஸ்தான் அணியை வீழ்த்தி அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

அரையிறுதி ஆட்டத்தில் தென் கொரியா, ஜோர்டான் அணிகள் மோதுகின்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset