நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இரு தேசிய ஹாக்கி அணிகளை மலேசிய ஹாக்கி சங்கம் அதிரடியாக நீக்கியது

கோலாலம்பூர்: 

ஆண்களுக்கான தேசிய ஹாக்கி சீனியர் அணியும் ஜூனியர் அணியும் மலேசிய ஹாக்கி சங்கத்தால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. ஹாக்கியின் இரு தேசிய அணிகளும் மோசமான அடைவுநிலைகளைப் பதிவு செய்யப்பட்டதால் இந்த முடிவை ஹாக்கி சங்கம் எடுத்ததாக அதன் தலைவர் டத்தோஶ்ரீ சுபாஹான் கமால் கூறினார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு மலேசிய தேசிய ஹாக்கி அணி தகுதி பெற தவறிவிட்டது. அத்துடன் ஜூனியர் உலக கிண்ண ஹாக்கி தொடரில் அமின் ரஹிம் தலைமையிலான ஹாக்கி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தேசிய ஹாக்கி அணி ஹங்ஷோ ஆசிய போட்டியிலும் படுதோல்வி அடைந்தது.

முன்னதாக, மலேசிய ஹாக்கி சங்கம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஶ்ரீ சுபாஹான் கமால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset