நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது: ஆளுநர் ரவிக்கு ஸ்டாலின் கண்டனம்

சென்னை: 

“தமிழ்நாட்டில் திருவள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். காவி உடையில் திருவள்ளுவரை சித்தரித்து அவரை சனாதனத் துறவி என்று தமிழக ஆளுநர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் முதல்வர் தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “தமிழினத்தில் பிறந்து அமிழ்தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான்புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துகள்! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூகநீதிக் கோட்பாட்டையும் - முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும் - அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர்.

133 அடியில் சிலையும் - தலைநகரில் கோட்டமும் அமைத்துப் போற்றும் குறளோவியத் தமிழ்நாட்டில் வள்ளுவரை யாரும் கறைப்படுத்த முடியாது.

குறள் நெறி நம் வழி!
குறள் வழியே நம் நெறி!” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஆளுநர் ரவி, “திருவள்ளுவர் படத்திற்கு காவி வண்ணம் தீட்டப்பட்டு அவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி என்று குறிப்பிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். இது நாடு முழுவதும் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது. 

ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset