நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாட்டின் துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின் ? அமைச்சரவையிலும் மாற்றம் வரும் என எதிர்பார்ப்பு 

சென்னை: 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டிற்குப் பயணமாகவுள்ளதால் விரைவில் தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், தமிழக அமைச்சரவையிலும் பெரிய மாற்றம் நிகழும் என்று எதிர்பார்ப்பு வலுத்துள்ளதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

முதலில் துணை முதல்வர் பதவி தொடர்பாக மறுப்பு தெரிவித்து வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது முதல்வரே முடிவெடுக்கட்டும் என்று ஊடகங்களுக்கு சொல்லியிருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது. 

துணை முதல்வர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று திமுக தரப்பில் கிசுகிசுப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset