நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சொக்சோ சந்தா செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: சிவநேசன்

ஈப்போ:

தொழிலாளர்களுக்கு சமுக நல பாதுகாப்பு சொக்சோ சந்தா செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்  அ. சிவநேசன் எச்சரித்தார்.

தொழிலாளர்களின் நலனை கருத்தில கொண்டு அவர்களுக்கு சொக்சோ சந்தா செலுத்தும அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இம்மாதம் 3ஆம் தேதி  சம்பவம் ஒன்றில் 41 வயதான பாதுகாவலரான  ரஸிஸ் ஜமால் என்பவர் கொல்லப்பட்டார்.

இதனால் விதவையான 33 வயதான நூர்ஸ்யாகினா அப்துல் கனி, மனைவி ,  7 மாதக் கைக் குழந்தை மற்றும் 13 வயது வரை உள்ள அவரது நான்கு குழந்தைகளின் நிலை கேள்விக் குறியானது.

அவரது கணவர் பணிபுரிந்து வந்த நிறுவனம் செலுத்தி வந்த சொக்சோ சந்தாவினால் அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ஒன்றுக்கு 1,522 ரிங்கிட்டை  ஓய்வூதியமாகப் பெறத் தகுதி பெற்றதை கூறினார்.

அம் மாதுவிற்கு அந்ந நிதியை ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவநேசன் சொக்சோ சந்தாவின் பயன்பாட்டின் அவசியத்தை சிவநேசன் எடுத்துரைத்தார்.

நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சொக்சோ சந்தா மட்டும் அல்ல சேமநிதியையும் அவசியம் செலுத்த வேண்டியதையும் நினைவுறுத்தினார்.

தொழிலாளர்களுக்கு சொக்சோ சந்தா மற்றும் இ.பி.எப் .செலுத்தப்படுகிறதா என்ற சோதனையை அதன் சொக்சோ அமலாக்க அதிகாரிகள் சோதனை நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வர் என்றார்.

மேலும் பேசிய சிவநேசன், 
பேரா மாநில சொக்சோ இயக்குனராக வீ.மோகனதாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ள தகவலையும் தெரிவித்தார்.

பேரா மாநிலத்தில் அதிகமான இந்தியர்கள் வசிக்கக் கூடிய இடமாக இருப்பதால் சொக்சொ விவகாரங்கள் தொடர்பாக  விளக்கம் பெறவிரும்புவர்கள் சௌகரியத்தை அளிக்கும் என்றார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset