நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

தோக்கியோ: 

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர். 

ஜப்பானில் ஜனவரி 1-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அந்நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுவரை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 31800 பேர் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள், அவசகர கால பணிகள் மற்றும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் ஃபுமியோ கிசிடா தலைமையிலான அரசு முக்கிய ஆலோசனை நடத்தவிருக்கிறது.

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset