நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங், கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை: நட்மா 

கோலாலம்பூர்: 

செவ்வாய் இரவு முதல் கிளந்தான்,பகாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. 

புதன்கிழமை காலை 6 மணி நிலவரப்படி 13 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் இன்னும் இரு மாநிலங்களிலும் உள்ள மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கிளந்தான் பாசிர் மாஸில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 பேராகவே உள்ளதாகத் தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு (நாட்மா) தெரிவித்துள்ளது.

பகாங்கில், மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12 பாதிக்கப்பட்டவர்கள் மாறனில் உள்ள நிவாரண மையத்தில் உள்ளனர், மேலும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 10 பேர் தெமர்லோவிலுள்ள நிவாரண மையத்தில் உள்ளனர்.

டூங்கூன், திரெங்கானு, சுங்கை சாம், டாபோங் போன்ற பகுதிகளில் வெள்ளத்தால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset