நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென்று தீப்பற்றிக்கொண்டது; ஹனேடா விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு 

தோக்கியோ: 

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென்று தீப்பற்றிக்கொண்டது. இந்த சம்பவம் தலைநகர் தோக்கியோவில் அமைந்துள்ள ஹனேடா விமான நிலையத்தில் நிகழ்ந்தது. 

விமானம் தீப்பற்றிக்கொண்ட சம்பவம் NHK செய்தி நிறுவனம் வெளியிட்டது. மேலும், தீப்பற்றி கொண்ட  விமானத்திலிருந்து பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். 

JAL 516 ரக விமானமானது ஹொக்காய்டோவிலிருந்து ஹனேடாவிற்கு வந்து சேர்ந்தது. 

விமானம் தரையிறங்கிய நிலையில் மற்றொரு விமானத்துடன் மோதியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset