நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்து செய்திகள்

சென்னை:

உலகம் முழுவதும் இன்று(ஜன.1) ஆங்கிலப் புத்தாண்டு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக் கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீ திக்கான பயணத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும்.

“எல்லார்க்கும் எல்லாம்” என்ற நமது லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்த புத்தாண்டு அமையட்டும். அதற்கான நம்பிக்கையும், உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. அனைவருக்கும் எனது இனியஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: மலரும் புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகி, அனைவரது வாழ்விலும் அன்பு, மகிழ்ச்சி, குறைவில்லாத செல்வம் ஆகியவற்றை வழங்கும் ஆண்டாக அமைய உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: பிறக்கப் போகும் இந்தப் புத்தாண்டில் ஜனநாயக விரோத, பாஜக ஆட்சி அகற்றப்பட்டு, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைய வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: புதிய ஆண்டில் மத்தியில் இண்டியா கூட்டணியை அமரச் செய்து, நாட்டின் ஜனநாயகம், கூட்டாட்சிக் கொள்கை, மதச்சார்பின்மையை காப்போம் என இந்நாளில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஒவ்வொரு புத்தாண்டும் எல்லையில்லாத நம்பிக்கைகளுடன்தான் பிறக்கின்றன. நம்பிக்கைதான் வாழ்க்கை. கவலைகளைப் போக்கி மகிழ்ச்சியை வழங்கும் என்ற நம்பிக்கையுடன் 2024-ம் ஆண்டை வரவேற்றுக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். புத்தாண்டில் புதிய வெளிச்சம் பிறக்கட்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: இண்டியா கூட்டணி 2024-ல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டின் மதச்சார்பற்ற மாண்பையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் மரபையும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையோடு ஆங்கிலப் புத்தாண்டில் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: விடைபெறும் ஆண்டின் அனுபவங்களை உரமாக்கி, பூக்கும் புத்தாண்டை நம்பிக்கையோடு வரவேற்போம்.

மநீம தலைவர் கமல்ஹாசன்: அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ச்சியான செயல்பாடுகள், தளராத முயற்சியுடன் புதிய உயரங்களை அடையும் வாய்ப்பாகப் புத்தாண்டை எதிர்கொள்வோம்.

இவர்களுடன், பாமக தலைவர் அன்புமணி, தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிப் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்,   சு.திருநாவுக்கரசர் எம்.பி., சமக தலைவர் ரா.சரத்குமார் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset