நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அரபிக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி விலகுகிறது; கனமழைக்கு வாய்ப்பு இல்லை: சென்னை வானிலை மையம்  

சென்னை: 

அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால் கனமழைக்கு வாய்ப்பு இல்லை.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: 

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதிஉருவாகியுள்ளது. இது இன்று மேற்குவடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். 

இது தமிழகத்தை விட்டு விலகிச் செல்வதால், தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று (டிச.31) முதல் ஜன.5 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். 

டிச.30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 22 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 21 செ.மீ., காக்காச்சியில் 20 செ.மீ., மாஞ்சோலையில் (திருநெல்வேலி) 10 செ.மீ., பாபநாசத்தில் 3 செ.மீ., மதுரை புலிப்பட்டி, பெரியபட்டி, நீலகிரி மாவட்டம் ஆதார் எஸ்டேட், குன்னூர் ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வுப் பகுதி காரணமாக குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய மன்னார் வளைகுடா பகுதிகள், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் இன்று மணிக்கு 40 முதல்45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset