நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2023-இல் 7.5 கோடி கூடுதலான மக்கள் தொகை

வாஷிங்டன்:

உலக மக்கள்தொகை 2023இந்த ஆண்டு 7.5 கோடி அதிகரித்திருப்பதாகவும் இது, புத்தாண்டு தினத்தில் 800 கோடியைக் கடந்துவிடும் எனவும் அமெரிக்கா மக்கள்தொகை  கணக்கெடுப்பு மையம் தெரிவித்தது.

நிகழாண்டு உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில், ஒவ்வொரு நொடிக்கும் 4.3 பிறப்பு மற்றும் 2 இறப்புகளை எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவின் மக்கள்தொகையைப் பொருத்தவரை,  இந்த ஆண்டு 17 லட்சம் அதிகரித்துள்ளது. புத்தாண்டு தினத்தில் அது 33.58 கோடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset