நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா போரை நிறுத்த இஸ்ரேலுக்கு நெருக்கடி அதிகரிப்பு

டெல் அவிவ்:

காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது.

காசாவில் 10 வாரங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று அந்த நாட்டின் நட்பு  நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகியவை வலியுறுத்தியுள்ளன.

போரை நிறுத்த ஐ.நா. மனித உரிமை ஆணையம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் அடைந்தது.

இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை திங்கள்கிழமை வந்தடைந்தார்.

அவரும், போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு இஸ்ரேலை சம்மதிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

டெல் அவிவ் நகருக்கு வந்தக பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரீன் காலானா,
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்களின் உயிரிழப்புகள் மிகவும் அதீகமாக உள்ளது.

அங்கு உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமாகும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset