நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மக்களின் அறிவுப் பசிக்கு விருந்தாக அமைந்துள்ளது துபாய் நகரின் மாபெரும் நூலகம்: கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர்

துபாய் :

துபாய் நகரின் முஹம்மது பின் ராஷித் நூலகத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதிப்பக நூல்களை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர் நேரில் வழங்கினார்.

துபாய் நகரின் ஜடாப் பகுதியில் மிகவும் பிரமாண்ட முறையில் புத்தக வடிவில் அமைக்கப்பட்ட 'முஹம்மது பின் ராஷித் நூலகம்' கடந்த ஆண்டு அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களால் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த நூலகத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான நூல்கள் ஆங்கிலம், அரபி, தமிழ், சீன மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இடம் பெற்றுள்ளது.

தமிழ்மொழி நூல்கள் 
இந்த நூலகத்தில் தமிழ் மொழி நூல்கள் அதிகம் இடம் பெறும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நூல்களை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக முஹம்மது பின் ராஷித் நூலகத்தின் ஆலோசகர் டேவிட் ஹிர்ச் இடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பதிப்பக நூல்கள் கண்ணியத்திற்குரிய  காயிதேமில்லத் (ரஹ்) நினைவு மலர் , மணிச்சுடர் ரமலான் மலர் பவள விழா சிறப்பிதழ் , மர்ஹூம் குலாம் மஹ்மூத் பனாத்வாலா நாடாளுமன்ற உரைகள் உள்ளிட்ட புத்தகங்களை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர் நேரில் வழங்கினார். 

அப்போது அமீரக காயிதேமில்லத் பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் இராமநாதபுரம் பரக்கத் அலி, தேரா பகுதி செயலாளர் கீழக்கரை முஹம்மது காமில், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

அப்போது பேசிய பொதுச் செயலாளர் துபாய் நகரில் பிரம்மாண்டமாக  பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஏற்படுத்தியுள்ள ஆட்சியாளருக்கு நன்றி தெரிவித்தார். இந்த நூலகம் மக்களின் அறிவுப் பசிக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை. மேலும் இங்குள்ள கண்காட்சி மையத்தில் இந்தியாவின் பழமையான திருக்குர்ஆன் பிரதிகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது சிறப்பானது. குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம், வர்த்தகர்களுக்கான நூலகம், பொது நூலகம் என பல்வேறு பிரிவுகள் இடம் பெற்றிருப்பது முக்கியமானது. துபாயில் இருந்து வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழ் தினத்தந்தியும் இங்கு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

அதனை தொடர்ந்து பொதுச் செயலாளர் மொழிப் பூங்கா என்று அமைக்கப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட உலகின் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ள கருத்துக்களை பார்வையிட்டார். மேலும் கண்காட்சி மையத்தையும் பார்த்தார்.

இந்த நூல்களைப் பெற்றுக் கொண்ட நூலக அதிகாரி பொதுச்செயலாளர் கே.ஏ. எம். முஹம்மது அபுபக்கர் நன்றி தெரிவித்தார்.

கலைஞர் மு. கருணாநிதி எழுதிய பல்வேறு வகையான நூல்கள், அறிவியல் அறிஞர் வழுத்தூர் வெள்ளம்ஜி எம்.ஜே. முஹம்மது இக்பால் எழுதிய 'அறிவியல் அதிசயம்' , இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய 'அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்' என்ற காவிய நூல், ஈரோடு கு. ஜமால் முஹம்மது எழுதிய 'தியாகச்சுடர் திப்பு சுல்தான்', மதுரை கவிஞர் இரா.இரவி எழுதிய ஹைக்கூ கவிதை நூல்கள், திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு, சென்னை இந்திய நிறுவனம் டிரஸ்டின் நூல்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நூலகள் ஏற்கனவே நூலகத்துக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- முதுவை ஹிதாயத்

தொடர்புடைய செய்திகள்

+ - reset