நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2027-ஆம் ஆண்டுக்குள்ள 50,000 கிளைகளைத் திறப்பதற்கு மெக்டோனல்ஸ் இலக்கு

நியூயார்க் :

2027-ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 50,000 கிளைகளைத்  திறப்பதற்கு மெக்டோனல்ஸ் நிறுவனம் இலக்கு கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் துரித உணவு உணவகச் சங்கிலியின் வரலாற்றில் மிக விரைவான வளர்ச்சித் திட்டமாகும்.

கடந்த ஆண்டு வரை உலகில் மொத்தம் 40,275 கிளைகளை மெக்டோனல்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது.

2027-ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையில் 25% உயர்த்துவதற்கான நடவடிக்கையில் அந்நிறுவனம் தற்போது செயல்பட்டு வருகின்றது.

அமெரிக்காவில் வேகமாக வளர்ந்து வரும் மெக்டோனல்ஸ் நிறுவனம், துரித உணவுத் துறையில் மிகப்பெரிய சங்கிலியாகும்.

மேலும். இந்நிறுவனம் ஸ்டார்பக்ஸ் மற்றும் சப்வேய் ஆகிய இரண்டு உலகளாவிய நிறுவனங்களின் எண்ணிக்கையில் மிஞ்சியுள்ளது.

அடுத்தாண்டு  இந்நிறுவனம் சுமார் US$2.5 பில்லியன் டாலரை மூலதனச் செலவுக்குப் பயன்படுத்தவுள்ளது.

18 ஆண்டுகளில் 30,000 லிருந்து 40,000 உணவகங்களாக அதிகரித்ததை விட தற்போதைய விரிவாக்க விகிதம் அதிகமாக இருப்பதாக அதன் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி மேனு செத்தியாரெட் கூறினார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் மற்றும் அதற்கு அப்பால் மெக்டோனல்ஸின் வளர்ச்சித் திறனில் நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நீங்கள் உணர முடியும் என்று நம்புகிறேன் என்று ஸ்டீஜார்ட் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset