நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் குறியீடு மூலம் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம்

புனோம்பென்:

கம்போடியா-வியட்நாம் நாடுகளுக்கிடையே கியூ-ஆர் குறியீடு மூலம் பணப்பரிமாற்ற சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கியூ-ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து நாட்டின் எந்த பகுதியிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன் அறிமுக விழா கம்போடியாவின் சீம் ரீப்பில் நடைபெற்றது. இதில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வியட்நாம் ஸ்டேட் வங்கி ஆளுனர் நிகுயென் தி ஹாங் மற்றும் கம்போடிய தேசிய வங்கியின் ஆளுனர் சியா செரே ஆகியோர் தலைமையில், பேமென்ட் லிங்க் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்தப் புதிய கட்டண முறையானது பாதுகாப்பானது மற்றும் வசதியானது எனவும், எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எல்லை தாண்டிய கியூ-ஆர் குறியீடு கட்டண முறையானது வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் வியட்நாமில் கம்போடிய பணத்தில் பொருட்களை வாங்குவதற்கும் பணம் செலுத்துவதற்கும் உதவுகின்றது.

அதேபோல் வியட்நாமைச் சேர்ந்தவர்கள் கம்போடியாவில் வியட்நாமின் பணமான டாங்கைப் பயன்படுத்தலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset