நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வெள்ளக்காடாகி நீர்த் தீவு போல் காட்சியளிக்கும் சென்னை

சென்னை: 

மிக்ஜாம் புயலால் 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 36 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து கொட்டி வரும் பெருமழையால் தலைநகர் சென்னை, புறநகர் பகுதிகள் தீவாக மாறியது. 

திரும்பிய பக்கமெல்லாம் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் ரயில், பஸ் சேவை ரத்தானது. 

இன்று முற்பகலில் புயல் கரையை கடக்கும் என்பதால், பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அரசு எச்சரித்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ‘மிக்ஜாம் புயல்’ வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரா - வடதமிழக கடலோரப்பகுதிகளில் வலுப்பெற்று ‘தீவிர புயலாக’ சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு வடகிழக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. 

இது தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து இன்று (செவ்வாய்கிழமை) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையில் நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே பாபட்லாவிற்கு அருகே தீவிர புயலாக கடக்கக்கூடும். 

அச் சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset