
செய்திகள் தமிழ் தொடர்புகள்
டிசம்பர் 3 - மாற்றுத்திறனாளிகள் நாள்: மாற்றுத்திறனாளிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்போம்: எம் எச் ஜவாஹிருல்லா
சென்னை:
மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அக் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ. நா சபை உலகம் முழுவதும் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் என டிசம்பர் 3ஐ அனுசரிக்கின்றது.
சமூகம் மற்றும் வளர்ச்சியின் ஒவ்வொரு மட்டத்திலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் கட்டாயம் பேணப்பட வேண்டும். அவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கவும் மன அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நாம் அனைவரும் மாற்றுத்திறனாளிகளுடன் தோளோடு தோள் சேர்ந்து நிற்போம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் தடைகள், மனத்தடைகள், பொருளாதாரத் தடைகள் நீங்க முழு ஒத்துழைப்பு நல்கச் சூளுரைப்போம் என்று பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 5, 2025, 8:36 am
கொடைக்கானலில் கோடைவிழா: மலர்க் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறது பிரையன்ட் பூங்கா
May 3, 2025, 7:24 pm
தமிழகம் முழுவதும் மே 5-ஆம் தேதி கடைகளுக்கு விடுமுறை: வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு
May 1, 2025, 7:39 pm