நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

புது டெல்லி:

தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்ட  மசோதாக்கள் நிலுவையில் வைத்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்த விவகாரத்தில் நிலவும் முட்டுக்கட்டையை முடிவுக்குக் கொண்டு வர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு ஒரு மாநிலத்தின் ஆளுநர் பரிந்துரைக்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின்படி, மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு மூன்று தேர்வுகள்தான் உள்ளன.

மசோதாவுக்கு ஒப்புதலை வழங்கலாம் அல்லது நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். மூன்றில் ஒன்றைத்தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset