நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் பரவும் மர்மக் காய்ச்சல்: WHO கவலை

ஜெனீவா:

சீனாவில் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு ஜெனீவாவில் இயங்கி வரும் உலக சுகாதார அமைப்பு WHO கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சீனாவில் புதிய வைரஸால்ஏற்படும் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது.

அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அந்த மர்மக் காய்ச்சல் சுவாசப் பாதை வழியாக பரவுகிறதா என்பது குறித்து இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தத் தகவல்கள் கவலை அளிப்பவையாக உள்ளன.

இந்த நோய் தொடர்பான முழு விவரங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சீன அரசிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset