நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

துபாயிலிருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவையை பாத்திக் ஏர் தொடங்கியது

சிப்பாங்:

துபாயில் இருந்து கோலாலம்பூருக்கு நேரடி விமான சேவையை பாத்திக் ஏர் தொடங்கியுள்ளது.

கடந்த நவம்பர் 11ஆம் தேதி முதல் இந்த சேவை தொடங்கியதாக பாத்திக் ஏர், லயன் குழுமத்தின் வியூக இயக்குநர் டத்தோ சந்திரன் ராமமூர்த்தி கூறினார்.

புதிய விமான சேவையை திறக்கும் அதே வேளையில், எங்கள் பயணிகளுக்கு தடையற்ற, மகிழ்ச்சியான பயண அனுபவத்தை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். 
துபாய் - கோலாலம்பூர் சேவையானது பாத்திக் ஏர் விமான சேவையை மேலும் விரிவுபடுத்துகிறது.

ஆசியான், ஆசிய - பசிபிக் சந்தைகளை மத்திய கிழக்குடன் தடையின்றி இந்த சேவை இணைக்கிறது.

ஓடி714 விமானம் துபாயில் இருந்து ஒவ்வொரு திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் அதிகாலை 4.05 மணிக்கு புறப்பட்டு கோலாலம்பூருக்கு மாலை 3,55 மணிக்கு வந்து சேரும்.

அதே போன்று ஓடி713 விமானம் திங்கள், புதன், வெள்ளி,ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.05 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு அதிகாலை 2.25 மணிக்கு துபாயை சென்றடையும் என்று அவர் கூறினார்.

இதனிடையே 2026 மலேசியாவுக்கு வருகை தாருங்கள் எனும் திட்டம் வெற்றியடையும் வகையில் இந்த புதிய சேவையை பாத்திக் ஏர் தொடங்கியுள்ளது.

இந்த சேவை மலேசியர்களுக்கு பெரும் பயனாக இருக்கும் என்று சுற்றுலாத் துறையில் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அமார் அப்துல் கஃபார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset