நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

தங்கம் ஓர் ஆடம்பர பொருள் என்பதற்கான  தெளிவான விளக்கம் தேவை: டத்தோ அப்துல் ரசூல்

கோலாலம்பூர்:

தங்கம் ஓர் ஆடம்பர பொருள் என்பதற்கான தெளிவான விளக்கம் தேவை என்று மலேசிய இந்திய பொற்கொல்லர், நகை வணிகர்கள்  சங்கத் தலைவர் டத்தோ அப்துல் ரசூல் வலியுறுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த ஆடம்பர பொருட்களுக்கான வரியில் தங்கமும் இணைக்கப்பட்டுள்ளது.

இதனால் 10 ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேல் தங்க நகைகள் வாங்குபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்படவுள்ளது.

அப்படி வரி விதிப்பதன் வாயிலாக தங்க நகை தொடர்புடைய வணிகங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கும்.

உண்மையில் பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் இலக்காக இருக்கலாம்.

அதற்கு 50 ஆயிரம் ரிங்கிட்டுக்கு மேல் நகை வாங்கினால் இந்த வரிகள் விதிப்பது நியாயமாக இருக்கும்.

ஆனால், 10 ஆயிரம் ரிங்கிட் என்பது இந்த தொழில் துறைக்கு மிக குறைவான தொகையாகும். அதனால் வாடிக்கையாளர்களும் இந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களும் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவார்கள். 

அதேவேளை பி40 மக்கள் நகைகள் வாங்கும் போது இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

சேமிப்பு, முதலீடு என்ற அடிப்படையில் தான் தங்கம் வாங்குகின்றனர்.

ஆனால் இந்த தங்கத்தை ஆடம்பர பொருளாக அறிவித்ததற்கான காரணம் என்ன.

அதற்கான விளக்கங்களை அரசு முறையாகத் தர வேண்டும் என்று டத்தோ அப்துல் ரசூல் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset