நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கனடாவில் இ-விசா சேவையை தொடங்கியது இந்தியா

புது டெல்லி:

2 மாதங்களுக்கு பிறகு கனடா நாட்டவருக்கான இ - விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கியது.

இதனால் இரு நாடுகளுக்கு இடையே இருந்த பிரச்சனை சற்று தணிந்துள்ளது.
வணிக விசா, மருத்துவ விசா, மாநாட்டு விசா உள்ளிட்ட விசாக்களை வழங்கும் பணிகளை கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கனடா பாஸ்போர்ட் வைத்துள்ள அனைத்து கனடா குடிமக்களுக்கும் இந்தியாவுக்கான இவிசா வழங்கும் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில்  ஜூன் 18ம் தேதி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினார்.

இதை மறுத்த இந்தியா, கனடா நாட்டவருக்கான விசா உள்ளிட்ட தூதரக சேவைகள் நிறுத்தி வைத்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset