நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்பந்தம்: தற்காலிக போர் நிறுத்தம்

ஜெருசேலம்:

காசாவில் 47 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலை 4 நாள்கள் நிறுத்தி 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டது.

காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மற்றும் ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மிகவும் உக்கிரமாக நடத்தி வருகிறார். இதில் 14 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

போரை நிறுத்த ஐ.நா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், உலக நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன.

இந்நிலையில், கத்தார் அரசு மேற்கொண்ட தொடர் முயற்சியால் தற்காலிகமாக போரை 4 நாள்கள் நிறுத்த இஸ்ரேல் அரசு முன்வந்துள்ளது.

இதற்காக 50 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் தனது அவசர அமைச்சரவையைக் கூட்டி ஒப்புதல் தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset