நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிறார் சித்திரவதை சம்பவங்களின் எண்ணிக்கை வருத்தமளிக்கின்றது : நான்சி சுக்ரி

ஜொகூர் பாரு:

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் சிறார் சித்திரவதை சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் போக்கு வருத்தமளிக்கும் வகையில் இருப்பதாக  பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.   

2021-ஆம் ஆண்டில் 6,144 சிறார் சித்திரவதை வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் கடந்த ஆண்டு நாட்டில் 6,740 சிறார் சித்திரவதை வழக்குகள் பதிவாகியுள்ளன.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் வரை 5,216 சிறார் சித்திரவதை வழக்குகள் குறித்த புகார்கள் சமூக நலத் துறைக்கு கிடைத்துள்ளதாகவும், இது மிகவும் கவலை அளிப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

சித்திரவதை செய்யப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கை அதிகபட்சமாக 3,348 ஆகவும், சிறுவர்கள் 1,868 ஆகவும் உள்ளனர்.

ஒவ்வொரு நாளும், சிறார் சித்திரவதை தொடர்பான வழக்குகள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மக்கள் முன்பை விட தங்களைச் சுற்றி நடக்கும் சிறார் சித்திரவதை சம்பவங்கள் குறித்துப் புகாரளிப்பதில் அதிக விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர்.

மேலும், சமூக ஊடகங்களும் தவறான வழக்கை விரைவாக அறிய உதவுகிறது.

2023-ஆம் ஆண்டு தேசிய சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வின் பின்னர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நன்சி சுக்ரி இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையில், சிறார் சித்திரவதை வழக்குகள் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களால் வீட்டில் மட்டும் நடக்கவில்லை என்றும் இது தற்போது குழந்தை பராமரிப்பு மையங்களிலும் நடக்கின்றது என்றும் அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset