செய்திகள் மலேசியா
சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
கோலாலம்பூர் :
பிளாஸ்டிக் பொட்டலத்தில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்டார் சன்வே, சுபாங் ஜெயா சாலையோரத்தில் நேற்று மதியம் 1.25 மணியளவில் பொதுமக்களால் தொப்புள் கொடியுடன் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது என சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “
மருத்துவ அதிகாரியின் முதல் கட்ட பரிசோதனையின் முடிவில் அக்குழந்தை சீரான நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அக்குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் காண சிசிடிவி கேமரா இல்லை.
அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் குற்றவியல் சட்டத்தின் 317 வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 10:52 pm
நான் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர்; கட்சிக்கும் நான் தான் தலைவர்: புனிதன்
November 2, 2025, 10:51 pm
சிலாங்கூர் மக்கள் பிங்காஸ் உதவி நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்: பாப்பாராயுடு
November 2, 2025, 10:49 pm
கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் அணியின் இறக்குமதி வீரர் ஆவார்: போலிஸ்
November 2, 2025, 10:48 pm
நான் ஒருபோதும் அம்னோவை விட்டு வெளியேறவில்லை; என்னை நீக்கியது அக்கட்சி தான்: கைரி
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
