
செய்திகள் மலேசியா
இஸ்ரேல் தொடர்புடைய நிறுவன பொருட்களை தொடர்ந்து புறக்கணிப்போம்: துன் மகாதீர்
சைபர்ஜெயா :
இஸ்ரேலுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை மலேசியர்கள் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு இலக்கான பாலஸ்தீனத்தின் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.
இஸ்ரேல் செயலுக்கு மலேசியா கண்டனம் தெரிவிப்பதுடன் பாலஸ்தீனத்திற்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறது.
மேலும் பாலஸ்தீன மக்களுக்கு உதவ மலேசியாவால் இராணுவத்தை அனுப்ப முடியாது.
அதே வேளையில் பெரிய அளவில் உதவிகளை செய்ய முடியாது.
ஆனால் இஸ்ரேல் தொடர்புடைய நிறுவனஙகளின் தயாரிப்பு பொருட்களை நம்மால் புறக்கணிக்க முடியும்.
உலகம் முழுவதும் சுமார் 1.7 பில்லியன் முஸ்லிம் மக்கள் உள்ளனர்.
இம்மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்.
இதன் மூலம் இஸ்லாத்தின் சக்தியை உலகிற்கு புரிய வைக்க முடியும் என்று துன் மகாதீர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்