நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலக மக்கள் தொகை 800 கோடியைக் கடந்தது

வாஷிங்டன்:

உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து விட்டதாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் அறிவித்தது. கடந்த செப்டம்பர் 26ம் தேதியன்றே இந்த எண்ணிக்கை கடந்திருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதமே, உலக மக்கள்தொகை இந்த எண்ணிக்கையை அடைந்திருக்கலாம் என ஐ.நா.சபை மதிப்பிட்டிருந்தது. மக்கள்தொகை கணக்கெடுப்பு முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் இந்த முரண்பாடு நிலவுகிறது.

2000ம் ஆண்டு 600 கோடியாக இருந்த உலக மக்கள்தொகை, தற்போது 800 கோடியாக அதிகரித்துள்ளது.  

1960-2000 வரையிலான காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2 மடங்காக இருந்த நிலையில், தற்போது அது குறைந்துள்ளது. பெண்கள் கருவுறும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருவது கடந்த 50 ஆண்டுகளாக உலக மக்கள்தொகை குறைவான விகிதத்தில் அதிகரித்து வருவதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset