நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தினமும் 4 மணி நேரம் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் ஒப்புதல்

வாஷிங்டன்:

காசா பகுதியிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக, தினமும் 4 மணி நேரம் தாக்குதலை நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசி மூலம் அதிபர் ஜோ பைடன் தொடர்பு கொண்டு பேசியதன் மூலம் தினமும்  4 மணி நேரத்துக்கு காசாவில் தாக்குதலை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இது வெள்ளிக்க்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு வரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக, 2வது பாதுகாப்பு வழித்தடத்தை இஸ்ரேல் திறந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset