நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தீபாவளியைக் கொண்டாடிய ரிஷி சுனக், கமலா ஹாரீஸ்

லண்டன் - நியூயார்க்:

தீபாவளிப் பண்டிகையை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும், ரஷிய துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகியோர் கொண்டாடினர்.

தீபாவளியை பண்டிகையை கொண்டாடும் வகையில் பிரிட்டன் பிரதமர் இல்லம் வண்ண மலர்களாலும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

இது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், நமது குடும்பங்களுக்கு தீபாவளி என்பது விசேஷமான தருணமாகும்.

பிரதமராக பொறுப்பேற்று கடுமையான உழைப்பு நிறைந்த ஓராண்டாகும். இப்போதைய நிகழ்வுகள் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும். பிரதமராக கடந்த ஓராண்டில் பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளேன் என்றார்.

அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தனது அதிகாரபூர்வ இல்லத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.

விழாவில் பேசிய அவர், உலகில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் நாம் தீபாவளி கொண்டாடுகிறோம்.  நமது உலகில் கடினமான, இருள்சூழ்ந்த தருணங்களும் உள்ளன. இஸ்ரேல் மற்றும் காசாவில் போர் நிகழ்ந்து வருகிறது. இது நமக்கு அதிருப்தியை அளிக்கிறது.

காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வதை நாம் ஆதரிக்கிறோம். பாலஸ்தீனர்கள் கண்ணியமாக வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுள்ளனர். அதை நாம் தொடர்ந்து ஆதரிப்போம் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset