நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸாவில் 10 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்பு: சவக் குவியலாக மாறியதால் போரை நிறுத்த ஐ.நா. வலியுறுத்தல்

காசா சிட்டி:

கடந்த மாதம் 7ம் தேதி முதல் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது. குழந்தைகளின் சடலங்கள் சவக் குவியலாக கிடப்பதால் உடனடியாக போரை நிறுத்த ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

காசா சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 31 நாள்களாக இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதலில் இதுவரை 10,022 பேர் உயிரிழந்துள்ளனர்.

In Photos: Palestinians struggle to bury their dead as bodies pile up on  streets and under the rubble - War on Gaza - War on Gaza - Ahram Online

Thousands mourn 21 victims of devastating apartment fire in Gaza | The  Times of Israel

அவர்களில் 4,104 பேர் சிறுவர்கள் ஆவர். இது தவிர, இந்தத் தாக்குதல்களில் 2,660 பேர் மாயமாகியுள்ளனர்; 25,408 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தாலும், யூத குடியிருப்புவாசிகளாலும் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 148ஆக அதிகரித்துள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset