நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மீண்டும் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

ரஃபா:

இஸ்ரேலால் மூடப்பட்ட காசாவில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ராஃபா நகர எல்லை மீண்டும் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

காசாவிலிருந்து ரஃபா வழியாக எகிப்துக்குள் பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கப்பட்டது 2 நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அந்தப் பணிகள் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. எகிப்தின் முயற்சியால்  இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டது.

இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்த சுமார் 30 பேர் அந்த எல்லை வழியாக வெளியேறினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்கள் நாட்டுக்குள் நுழைந்து ஹமாஸ் நடத்திய பயங்கர தாக்குதலுக்கு பதிலடியாக, காஸô முழுவதையும் இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளது.

இது, ஹமாஸின் குற்றத்துக்காக காஸôவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அளிக்கப்படும் கூட்டுத் தண்டனை என்று விமர்சிக்கப்படுகிறது.

இஸ்ரேலின் தாக்குதல் மற்றும் முற்றுகையால் காசாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் மட்டுமின்றி, அங்கு சேவையாற்றிவரும் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த வெளிநாட்டினரும், இரட்டைக் குடியுரிமை பெற்று அங்கு வசித்துவருபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset