நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலைப் பாதுகாப்பதற்காக எத்தனையோ இஸ்லாமிய நாடுகளை அழித்தாகி விட்டது: இலங்கை மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் கண்டனம்

கொழும்பு:

இஸ்லாமிய உலகை அடக்கி ஆள்வதற்கு வல்லரசுகள் பாவித்த ஆயுதம்தான் இஸ்ரேல் என்ற குடியேற்றமாகும்.  இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கென்றே எத்தனையோ இஸ்லாமிய நாடுகளை அழித்தாகி விட்டது. பலம்பொருந்திய இராணுவங்கள் இருந்த ஈராக்கையும், லிபியாவையும் சிரியாவையும் அவை சுக்கு நூறாக்கியிருக்கின்றன ஈற்றிலே பலஸ்தீனுக்கு விடுதலை கிட்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். 

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீம்  இவ்வாறு தெரிவித்தார்.

பலஸ்தீனத்தில் ஆயிரக் கணக்கில் அப்பாவி மக்கள்  படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும்,பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபம் தெரிவித்தும் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செய்யத்  அலி சாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஏறாவூர் ஆற்றங்கரை,  மௌலானா பூங்கா முன்றலில்  நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

20 வருடங்களுக்கு மேலாக ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியிருக்கின்ற காஸாவில் இன்று நடக்கின்ற அட்டூழியங்களுக்கு எதிராக பேசுகின்ற கணிசமான யூதர்களும் இருக்கின்றார்கள் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு மனிதாபிமானமிக்க யூதர்களும் இன்று இந்த அநியாயத்துக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நினைத்து நாம் ஓரளவு ஆறுதல் அடைய வேண்டும். ஆனால் இதற்கு பின்னால் இருக்கின்ற ஏகாதிபத்திய சக்திகள் அதாவது இந்த சியோசிஸ ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்ற இந்த வல்லரசுகளை பார்த்தால்,  அவை எல்லாம் எங்களைச் சுரண்டிப் பிழைத்த வல்லரசுகள், அதாவது மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டிப் பிழைத்துத்தான் அவை வல்லரசு ஆகி இருக்கின்றன.

ஹிட்லர் மிக மோசமாகக் கொன்று குவித்த யூதர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை வைத்து இஸ்லாமிய உலகை அடக்கி ஆள்வதற்கு அவர்கள் பாவித்த ஆயுதம்தான் இஸ்ரேல் என்ற குடியேற்றமாகும்.

அதனால் அவர்கள் ஆறுதல் அடையவில்லை. தொடர்ந்தேர்ச்சியாக இஸ்ரேலை பாதுகாப்பதற்கு என்றே எத்தனையோ இஸ்லாமிய நாடுகளை அழித்தாகி விட்டது. பலம்பொருந்திய இராணுவங்கள் இருந்த ஈராக்கையும், லிபியாவையும் சிரியாவையும் சுக்கு நூறாக்கியிருக்கின்றன இந்த வல்லரசுகள். 

திட்டமிட்டு பலவந்த குடியேற்ற நாடொன்றை பாதுகாப்பதற்காக அங்கு வசித்த பூர்வீகக் குடிகளை 200 ஆண்டுகளுக்கு முன்பு கொன்று குவித்து, அடக்கி ஆண்டு, அவர்களின் நிலங்களைப் பறித்து அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற அமெரிக்க வல்லரசுக்கு எதிராக  அந்த நாட்டிலும் ஏராளமான அமெரிக்கர்கள் தங்களது ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த அநியாயத்துக்கு எதிராகப் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்த அட்டூழியங்கள், அநியாயங்கள் ஊடாக நடக்கின்ற போராட்டங்களின் விளைவாக ஈற்றிலே பலஸ்தீனுக்கு விடுதலை கிட்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். 

பலஸ்தீன மக்களுக்கு இந்த தியாகத்தின் மூலமாக கிடைக்கின்ற கூலி சாமானியமான தல்ல. அவர்களின் விமோசனத்திற்காக முழு முஸ்லிம் உலகமும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு புறமிருக்க, நியாயத்தையும், நீதியையும் நாடி நிற்கின்ற உலகின் மூலை முடுக்கெங்கும் வாழ்கின்ற  கோடிக்கணக்கான முஸ்லிம் அல்லாதவர்களும் இந்த அநியாயத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்திருக்கின்றார்கள். 

எல்லா நாடுகளிலும் யூதர்கள் ஊடுருவி இருக்கின்றார்கள். சமூக வலைதளங்களில் பார்த்தால் , இந்த இலங்கை நாட்டில் இருக்கின்ற பெருந்தேசிய வாத மக்களில் ஒரு சாரார் மத்தியிலும், பலஸ்தீனர்களுக்கு நடக்கின்ற கொடுமைகளைக் கொண்டாடுகின்ற அளவிற்கு மோசமான உணர்வுகள் மேலோங்கியிருப்பதையிட்டு  வெட்கப்படவேண்டும். 

தனது பாராளுமன்ற பிரவேசத்தை கொண்டாடுவதற்கான ஒரு நிகழ்வை இப்படியான ஒரு கண்டனப் பேரணியாக மாற்றியிருக்கின்ற  அலிஸாஹிர் மௌலானா எம்.பி  சமூகத்தில் நடக்கின்ற ஒவ்வொரு பிரச்சினைக்கும் தனி ஆளாக புதிய யுக்திகளையும், உபாயங்களையும் பாவித்து போராட்டங்களை ஆரம்பித்தவர். ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது அவரது கபன் துணிப் போராட்டம் எப்படியெல்லாம் வியாபித்து முஸ்லிம்களை நாடு முழுவதும் அந்த அட்டூழித்துக்கு எதிராக கிளர்ந்தெழ வைத்ததோ ,அதே போல இன்று நடத்துகின்ற இந்தக் கண்டன பேரணி, இந்த நாடு முழுவதும் அதன் தாக்கத்தை எற்படுத்தும் என்றார்.

(உரையின் முடிவில் சகல சமயத்தினரும், சமூகத்தினரும் அமைப்புக்களும் அரசியல் தலைவர்களும்  கூட்டாக 7ஆம் திகதி, செவ்வாய்க் கிழமை 3.30 மணிக்கு இலங்கைத் தலைநகர் கொழும்பு, ஹைட்பார்க் மைதானத்தில் நடத்தும்  பலஸ்தீன் ஆதரவுக் கூட்டத்தில்  அணிதிரளுமாறு அழைப்பு விடுத்தார்).

- மஹ்தியா காளிமுத்து

தொடர்புடைய செய்திகள்

+ - reset