நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் காற்று மாசு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது

சிங்கப்பூர் :

சிங்கப்பூரில் இன்று காலை, IPU எனப்படும் காற்று மாசு குறியீடு ஆரோக்கியமற்ற நிலையைப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்கு தீவின் பல பகுதிகளில் 24 மணி நேரத்துக்கான IPU குறியீடு 61 முதல் 107 வரை பதிவானது. கிழக்குப் பகுதியில் ஆக உயர்ந்த IPU குறியீடு பதிவானது.

மேலும், IPU குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் அஃது ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படும்.

எனவே, பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கும்படி தேசிய சுற்றுப்புற வாரியம் ஆலோசனை விடுத்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா வட்டாரத்தில் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்ததை முன்னிட்டு இப்பகுதில் IPU ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.

சுமத்ராவில் 212 காட்டுத் தீச்சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

காற்றின் திசை மாறியதால் புகைமூட்டம் சிங்கப்பூரை எட்டியது; அதைத் தொடர்ந்து இங்குக் காற்றுத்தரம் மோசமடைந்தது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வெளிப்புற நடவடிக்கைகள், நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடுவோர், தேசிய சுற்றுப்புற வாரியம் வெளியிடும் அன்றாட புகைமூட்ட ஆலோசனையைச் செவிமடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள், பள்ளிகள், வேலையிடங்கள் உள்ளிட்ட சில துறைகளுக்கு புகைமூட்ட ஆலோசனைக் குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக வாரியம் தெரிவித்தது.

முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில், ஆக மோசமாக IPU 300-யைக் கடந்து ஆபத்தான நிலையை எட்டியது நிலையில் கல்வி அமைச்சு, அனைத்துத் தொடக்கப் பள்ளிகளையும் உயர்நிலைப் பள்ளிகளையும் மூட உத்தரவிட்டது.

-அஸ்வினி செந்தாமரை

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset