நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலக்கியத் துறையில் 2023-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வெல்கிறார் ஜோன் ஃபாஸ்

ஸ்டாக்ஹோம் :

கடந்த 1901-ஆம் ஆண்டிலிருந்து மருத்துவம், பௌதிகம், வேதியியல், இலக்கியம் மற்றும் உலக அமைதி ஆகிய ஐந்து துறைகளில் மனித குலத்திற்கு நன்மை பயக்கும் சாதனைகள் புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இவ்வாண்டு இலக்கியத் துறையில்  தமது எழுத்துக்களால் புதுமை படைத்த நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜோன் ஃபாஸ் என்பவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் விருதுக்கான தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

ஜோன், தனது புதுமையான நாடகங்கள், நாவல்கள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் மூலம் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் நைனார்ஸ்க் இலக்கியத்தில் சாதனை படைத்துள்ளார்.

இந்த விருது தமக்குக் கிடைப்பதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும் இதை இலக்கியத்திற்கான பரிசாகத் தாம் கருதுவதாகவும் ஜோன் ஃபாஸ் தெரிவித்தார்.

1901-ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை இலக்கியத்திற்கான நோபல் விருது 116 முறை வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset