நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அதிகம் வெப்பம் மிகுந்த ஆண்டாக 2023 பதிவு செய்யப்பட்டுள்ளது

லண்டன் :

இவ்வாண்டு அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாகப் பதிவாகி வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பனிகஸ் பருவநிலை மாற்ற சேவை மையம் தெரிவித்துள்ளது.

2023-ஆம் ஆண்டில் வெப்ப நிலை அதிகரித்து வரும் நிலையில் செப்டம்பர் மாதம் உலகலாவிய நிலையில் அதிக வெப்பத்தைப் பதிவு செய்ததாக கோப்பனிகஸ் மையத்தை மேற்கோள் காட்டி ஜெர்மன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளின் செப்டம்பர் மாதத்தை விட இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை பதிவான செப்டம்பர் மாத வெப்ப நிலையில் சராசரி ஒரு டிகிரி அதிகமானதை இது குறிக்கின்றது.

அதிகம் வெப்பம் காரணமாக எதிர்பார்க்கப்படாத வெப்ப் நிலை கடந்த செப்டம்பர் மாதம் பதிவாகியுள்ளது. இது வழக்கத்திற்கு மாறான வெப்ப அளவாகும் என கோப்பானிக்கஸ் பருவநிலை மாற்ற சேவை மையத்தின் துணை இயக்குநர் சமந்தா பர்கிஸ் கூறினார்.

உலகம் முழுவதும் உள்ள வானிலை மையங்கள், துணைக் கோளங்கள்,கப்பல்கள் விமானங்களிடமிருந்து பெறப்பட்ட கோடிக்கணக்கான தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட கணினி ஆய்வின் மூலம் இந்த தரவுகள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset